News December 18, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 19, 2025

நாமகிரிபேட்டை அருகே வாலிபர் மர்மசாவு!

image

நாமகிரிபேட்டை, ஈஸ்வரமூர்த்திபாளைத்தில் முத்துலிங்கம் என்பவர் தனது தோட்டத்தின் அருகே செல்போன் கோபுரம் அருகில் நேற்று முன்தினம் 30 வயது ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை போலீசாருக்கு தெரிவித்தார். விசாரணையில் இறந்தவர் ஈஸ்வரமூர்த்திபாளையம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என உறுதி செய்யப்பட்டது. மர்மமான முறையில் இறந்த நிகழ்வின் காரணம் குறித்து மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 19, 2025

நாமக்கல்லில் நாளை வேலை மழை! 10,000+ காலிப்பணியிடம்

image

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (20.12.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில், 10,000 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய 04286-222260/ 6380369124 எங்களில் தொடர்பு கொள்ளலாம்.

News December 19, 2025

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (19-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ.118-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 6.25- ஆக நீடித்து வருகிறது. வட மாநிலங்களில் நிலவும் அதிகப்படியான குளிரின் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை சரிவின்றி உச்சநிலையில் நீடித்து வருகிறது.

error: Content is protected !!