News December 16, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
ரூ. 6.25- ஆக தொடர்ந்து நீடிக்கும் முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை யொட்டி கேக் தயாரிக்க முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளது.
News December 18, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 18, 2025
நாமக்கல்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

நாமக்கல் Tata COATS நிறுவனத்தில் Welders பணிக்காக 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண் நபர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு 01.01.2026 கடைசி தேதி ஆகும்.


