News June 13, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் 2,43,708 பசுக்கள், 54,692 எருமைகள் என மொத்தம் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு நூறு சதவீதம் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என ஆட்சியர் உமா தகவல்.

Similar News

News September 16, 2025

நாமக்கல்: நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

image

நாமக்கல், மல்லூர், ராசிபுரம், சமயசங்கிலி ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, பழந்தின்னிப்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், ராசிபுரம், சமயசங்கிலி, சீராம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. SHARE பண்ணுங்க மக்களே!

News September 16, 2025

நாமக்கல்: தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.19-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானோரை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

நாமக்கல்லில் நாளை மின்நிறுத்தம் அறிவிப்பு

image

நாமக்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 17ஆம் தேதி நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி, சிலுவம்பட்டி, கிருஷ்ணாபுரம், தும்மங்குறிச்சி, எர்ணாபுரம் கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்!

error: Content is protected !!