News November 1, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவின் மூலம் யோகா பயிற்சியாளர் தேர்வானது வரும் 03.11.2025 மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 74017-03492 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 1, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 1, 2025
நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 1, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை(நவ.2) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.


