News August 26, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 17 வட்டாட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டனர். திருச்செங்கோடு, நாமக்கல், குமாரபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ஆகிய பகுதியிலுள்ள வட்டாட்சியர்கள் வெகு நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் காரணத்தால் 17 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு !

நாமக்கல்லிலிருந்து வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி போர்காரணமாக, முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் 77 கன்டெய்னர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், நாமக்கல்லில் முட்டை விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
News March 4, 2026
குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா ?

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக சேர்மன் எஸ் பாலு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். இவரது மனுவை பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமார் அண்ணா அறிவாலயத்தில் அளித்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாலு பெயர் திமுக வேட்பாளர் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2026
நாமக்கல் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

நாமக்கல், வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தப்பியோட முயன்ற பொம்மம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


