News June 12, 2024
நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரி, இரவு வெப்பம் 73.4 டிகிரி அளவுகளில் காணப்படும். தென்மேற்கில் இருந்து மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 26, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 17 வட்டாட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டனர். திருச்செங்கோடு, நாமக்கல், குமாரபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ஆகிய பகுதியிலுள்ள வட்டாட்சியர்கள் வெகு நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் காரணத்தால் 17 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் கூட்டம்!

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயுநுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் (ஆக.28) வியாழக்கிழமை முற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
News August 26, 2025
குழந்தைகளுக்கு எதிரான புகார்களுக்கு அழைக்கவும்

நாமக்கல் மாவட்டத்தில் “குழந்தை திருமணத்தை தடுப்போம்”, பெண் குழந்தைகளின் கல்வியை காப்போம்” என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (18 வயதுக்கு கீழ்) தொடர்பான புகார்களுக்கு
“CHILD HELP LINE ” 1098 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தெரிவிக்கலாம், என மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.