News January 8, 2025
நாமக்கல் மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டார். அதில் ஆண் வாக்காளர்கள் 702555, பெண் வாக்காளர்கள் 751465 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
Similar News
News January 24, 2026
நாமக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க
News January 24, 2026
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி ரூ. 8 சரிவு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.145-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.141ஆக குறைந்து உள்ளது. அதை போல் முட்டைக்கோழி கிலோ ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.8 குறைந்து, ரூ. 72 ஆக விற்பனையாகி வருகின்றது.
News January 24, 2026
நாமக்கல் மாவட்டத்துக்கு 2 நாள் எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.24) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) (ம) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், வருகிற 27-ந் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 66.2, அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


