News December 20, 2024

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நாளை (டிச.21) காலை 10 மணிக்கு சேந்தமங்கலம் அரசு கல்லூரி வளாகத்தில் புதிய தொழில் பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News

News August 29, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட். 28 ) நாமக்கல் – கோமதி (9498167680 ), ராசிபுரம் – அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு – சங்கீதா ( 9498167212), வேலூர் – இந்திராணி ( 9498169033) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 28, 2025

நாமக்கல்லில் 89.96°F வெப்பம் பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 89.96° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.

News August 28, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ.5.05 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!