News February 15, 2025
நாமக்கல் மாணவன் தேசிய அளவில் தங்கம்!

திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி பகுதியில் உள்ள KSR கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பார்த்திபன் புதுதில்லியில் உள்ள கேடி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 4வது வாகோ இந்தியா கிக் குத்துச்சண்டை ஓபன் சர்வதேச சாம்பியன் ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் ஆர்.சீனிவாசன் தனது பாராட்டுதலை தெரிவித்தார்.
Similar News
News November 10, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. எனவே, இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை (ம) தோட்டக்கலை அலுவலகத்தையோ (அ) பொது சேவை மையத்திலோ ஆதார் எண், சிட்டா, தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு உடனடியாக பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 10, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் அரசின் இலவச தையல் மிஷின் பெற உரிய ஆவணங்களுடன் நவ.25ந் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு (ம) அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 40.
News November 10, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல்லில் இன்று நவம்பர் 10ஆம் தேதி தேசிய முட்டை குழுவில் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது மழை துளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.70 ஆகவே நீடிக்கிறது


