News December 20, 2025
நாமக்கல் மக்களே முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ந் தேதி காலை 11 மணியளவில் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை “அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்-637001” என்ற முகவரிக்கு வரும் 26-ந் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பலாம் (அ) கூட்டத்தில் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
Similar News
News December 24, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை ( டிசம்பர்.25) விடியற்காலை 1:20am மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்களே, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
News December 24, 2025
நாமக்கல்: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் கணக்கு இருப்பு (Balance), மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கடன் விவரங்களை அறிய வங்கிக்கு நேரில் செல்லத் தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் போதும்
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News December 24, 2025
பரமத்தி வேலூர் வசமாக சிக்கிய நபர்!

பரமத்தி அருகே அமைந்துள்ள வாழவந்தி பகுதியில் லாட்டரி விற்பனை அதிக அளவு நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தீவிர ஆய்வு நடத்தியதில் வாழவந்தி பகுதி சேர்ந்த அசோகன் என்பவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்பனை செய்வதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


