News April 24, 2025
நாமக்கல் மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை ஏப்.25ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், காலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அதனை தொடர்ந்து கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். SHARE பண்ணுங்க
Similar News
News April 24, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443656999) ,வேலூர் – சவிதா (8072913717) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News April 24, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (24-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.05 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 22) முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.05 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
News April 24, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-24) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.