News August 16, 2025

நாமக்கல் மக்களே இனி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே EB கட்டணம் அதிகமா வருதா? கவலை வேண்டாம்.. மின்வாரிய அலுவலகம் செல்லாமல், TANGEDCO செயலி அல்லது 94987 94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். மேலும், இந்தச் செயலி மூலம் மின் கட்டணத்தையும் செலுத்தலாம்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News August 16, 2025

லேசான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 2 மி.மீட்டரும், நாளை 1 மி.மீட்டரும், நாளை மறுநாள் 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் 18-ந் தேதி 5 மி.மீட்டரும், 19-ந் தேதி 3 மி.மீட்டரும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 16, 2025

நாமக்கல்: நிலம் வாங்கும் முன் இதை செய்யுங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. நாமக்கல் மக்களே நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய https://services.ecourts.gov என்ற இணையதளத்திற்கு சென்று நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம்.

News August 15, 2025

நாமக்கல்லில் முட்டை விலை மாற்றம் இல்லை

image

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) கூட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை தொடர்ந்து ரூ.4.90 ஆகவே நீடிக்கிறது.

error: Content is protected !!