News April 15, 2025
நாமக்கல் மக்களே! இந்த App முக்கியம்!

தமிழகத்தில் “காவல் உதவி App” பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல், அவசரநிலையின் போதும் உடனடி உதவியைப் பெறுவதற்காக, கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கு, இந்த செயலியைப் பயன்படுத்தலாம். இந்நிலையில், மகளிர் அனைவரும் காவல் உதவி செயலியை, தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
Similar News
News April 17, 2025
நாமக்கல் வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

நாமக்கல்: வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.600 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். மேலும், <
News April 17, 2025
நாமக்கல்: சூதாடிய 20 பேர் கைது !

திருச்செங்கோடு மலையடிவாரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காசு வைத்து சூதாடுவதாக திருச்செங்கோடு போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில், அங்கு ஒரு வீட்டில் போலீசார் சுற்றி வளைத்து சோதனையிட்ட போது சுமார் 20 பேர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் வாகனங்கள் மற்றும் 4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்
News April 17, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று (16/04/2025) இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர்- சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.