News December 23, 2025
நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
குமாரபாளையம்: வெந்நீரால் போன கணவர் உயிர்!

குமாரபாளையத்தை சேர்ந்த தம்பதி உதயகுமார் (40), பிரியா (39). தம்பதியருக்கு சுமித்ரா, பவித்ரா என, இரு மகள்கள் உள்ளனர். கடந்த, 23, இரவு, கணவர் உதய குமார் குளிப்பதற்காக பிரியா வெந்நீர் வைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது கை தவறி, அங்கு உட்கார்ந்திருந்த உதயகுமார் மீது வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்து. நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 27, 2025
வெண்ணந்துார் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

வெண்ணந்துார் அடுத்த ஆயிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, 65; இவர், நேற்று இரவு, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அத்தனுார் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து NHயை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி அதிவேகத்தில் சென்ற அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மணி இறந்தார். இதுகுறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


