News October 21, 2025

நாமக்கல்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

image

நாமக்கல்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE IT)

Similar News

News October 21, 2025

நாமக்கல்லில் முட்டை விலை அறிவிப்பு!

image

நாமக்கல்லில் இன்று அக்டோபர்-21ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

News October 21, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.21) நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 21, 2025

நாமக்கல்: சிறப்பாகப் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்!

image

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, இன்று (21.10.2025) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.விமலா, இ.கா.ப., சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காவலர்களின் சீர் மிகு பணியைப் பாராட்டி அவர் கௌரவித்தார்.

error: Content is protected !!