News February 6, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 20, 2026

நாமக்கல்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News February 20, 2026

நாமக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை

image

நாமக்கல்லில் நாளை (பிப்.21) சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2026

நாமக்கல்லில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

image

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் பகுதியில், சுந்தரமூர்த்தி என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ராட்வீலர் நாய், கடந்த 15-ம் தேதி மாலை 5:00 மணி அளவில் தெருவில் சென்ற கூலித்தொழிலாளி கார்த்திக்கைக் கடித்தது காயப்படுத்தியது. இதனால் அவர், வெண்ணந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சுந்தரமூர்த்தி மீது வெண்ணந்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!