News September 5, 2024
நாமக்கல்: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (e-Shram Portal)-ல் பதிவு செய்து குடும்ப அட்டை இல்லாதவர்கள் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகங்களில் இதற்கான உரிய படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ச.உமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
நாமக்கல் நான்கு சக்கர வாகன காவலர் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர்-14ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கல் – தங்கராஜ் (9498170895), வேலூர்- சுகுமாரன் (8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி (9498169110), திருச்செங்கோடு – பெருமாள் (9498169222), திம்மநாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்.
News November 14, 2025
திருச்செங்கோடு: காப்பர் ஒயர்களை திருடிய 8 பேர் கைது

திருச்செங்கோடு நகரம் ஈரோடு ரோடு பகுதியில் பி.எஸ்.என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் ஒயர்களை திருடிய எட்டு பேர் கைது ஒரு லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடப் பயன்படுத்திய பொலிரோ கார் பறிமுதல், செய்தனர். நீதிபதி 8 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பிஎஸ்என்எல் நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
News November 14, 2025
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடனான ஆலோசனை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.


