News April 25, 2025
நாமக்கல்: புகாரளிக்க செயலி (App) அறிமுகம்!

நாமக்கல்: சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல், புகார் அளிக்கலாம். Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க!
Similar News
News April 25, 2025
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்!

தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோயிலென்றால், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை, இந்தியாவில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளில் ஒன்றாக, 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் குடையப்பட்டதாகும். இந்த சிலை 5-ம் நூற்றாண்டில் குடையப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். SHARE IT
News April 25, 2025
உதவி லோகோ பைலட் பணி; உடனே விண்ணப்பியுங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை <
News April 24, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443656999) ,வேலூர் – சவிதா (8072913717) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.