News January 14, 2026

நாமக்கல்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi’ சொல்லுங்க

image

நாமக்கல் மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும்.இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News January 25, 2026

நாமகிரிப்பேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

நாமகிரிப்பேட்டை போலீசார் தொப்பப்பட்டி பகுதியில் நடத்திய ரோந்து பணியில், சட்டவிரோதமாக மது விற்ற ஜேடர்பாளையம் அழகேசன் மற்றும் பாபு ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 38 மதுபாட்டில்கள் மற்றும் 1,200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

மோகனூர் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தகராறில் தனலட்சுமி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். எஸ்பி விமலாவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின்படி சுரேஷ் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். படுகாயமடைந்த தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 25, 2026

கொல்லிமலை அருகே பள்ளி மாணவன் பலி

image

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மேல்கலிங்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தம்பதி சிவப்பிரகாசம்-சரஸ்வதி. இவர்களது இளைய மகன் ஆகாஷ் (14) 9-ஆம் வகுப்பு மாணவன். இவன் மோட்டார் சைக்கிளில் தெம்பலம் கிராமம் நோக்கி சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், சேலம் GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!