News September 14, 2025
நாமக்கல்: பாலியல் வழக்கில் மேஸ்திரி கைது!

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே சோழசிராமணி, மாரப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி மதன்குமார், 21, என்பவர், 15 வயது சிறுமியை கடத்தி, கோவிலில் கட்டாய திருமணம் செய்துள்ளார். ப.வேலுார் போலீசார் சிறுமியை மீட்டு, போக்சோ சட்டத்தில் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 14, 2025
நாமக்கல்: IMPORTANT ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் எர்ணாபுரம், CMS பொறியியல் கல்லூரியில் வரும் 20ம் தேதி சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற இந்த <
News September 14, 2025
நாமக்கல் கலெக்டர் அதிரடி உத்தரவு

நாமக்கல், போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் ஓலப்பாளையத்தை சேர்ந்த ஜாபர்வுல்லா மகன் இலியாஸ், 26, பாலப்பட்டி அருகே, குமாரபாளையத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரேம்குமார், 30 ஆகிய இருவர் மற்றும் கஞ்சா பொட்டலங்களை கடத்திய வழக்கில் முட்டாஞ்செட்டியை சேர்ந்த லோகேஷ் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News September 14, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.