News January 11, 2025

நாமக்கல் பள்ளி மாணவர்கள் உலக சாதனை

image

கந்தம்பாளையம் எஸ்.கே.வி.வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 420 மாணவ, மாணவிகள் தாங்கள் கற்கும் அறிவியல் பாடத்தில் இருந்து சூத்திரங்கள், வரையறைகள், கருத்துகள் போன்றவைகளை ஒவ்வொருவராக இடைவிடாமல் 10 மணி நேரம் ஒப்பித்து உலகசாதனை படைத்துள்ளனர். எலைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் (ம) தமிழன் புக் ஆப் ரெகார்ட் ஆகிய 2 உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் 10 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தது சான்றிதழ்களை வழங்கினர்.

Similar News

News November 11, 2025

நாமக்கல்லில் ரூ.80,500 சம்பளத்தில் வேலை!

image

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் உள்ள 9 கால்நடை மருத்துவர் ஆலோசகர் (11 மாத ஒப்பந்த அடிப்படையில்) பணிக்கான நேர்முகத் தேர்வு மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நவ.17 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் B.V.Sc & AH with Computer Knowledge உள்ள 50 வயதிற்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பணிக்கான சம்பளம் ரூ.80,500 ஆகும்.

News November 11, 2025

நாமக்கல்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

நாமக்கல்லில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யசஸ்வி கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 (ம) 11ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் 2025-26ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெற https://scholarships.gov.in/ என்ற வலைத்தளத்தில் நவ.15ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 11, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை ( நவம்பர். 12) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!