News September 18, 2025
நாமக்கல்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
நாமக்கல் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர், ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் காலை 8:30 மணிக்கு 20,671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
நாமக்கல்: மதுக்கடை அகற்ற எம்.பி. வலியுறுத்தல்!

மோகனூரில் அருள்மிகு ஸ்ரீ நவலடியான் கோயில் மிக அருகில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இதனால் இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அப்பகுதியினருக்கும் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே கடையை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் எம்.பி மாதேஸ்வரனிடம் கோரிக்கை வைத்தனர்.இக் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தல்!
News September 18, 2025
நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து பலி!

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த லட்சுமிபாளையம் பகுதியில் வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வெறிநாய் கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் இதே பிரச்சனை இருப்பதாக புகார் எழுகிறது.உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!