News October 16, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர்.16) நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News October 16, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (16.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
நாமக்கல்: முட்டை விலை 5 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.16) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News October 16, 2025
நாமக்கல்: திமுக எம்.பி நாளை பங்கேற்கும் நிகழ்ச்சிகள்!

திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் நாளை (அக்.17) வெள்ளிக்கிழமை ராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் புதிய தாழ்தள பேருந்துகளை துவக்கி வைக்கிறார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் பொது மக்களை சந்திக்கிறார்.