News November 29, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.29) நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (மருதுபாண்டியன் – 9655955530) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News December 1, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர்-1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1.20 மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 5.50 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
அசால்டாக அசத்திய நாமக்கல் முதியவர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கரூரில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சங்கிலி குண்டு எறிதல், வட்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த கரசப்பாளையத்தை சேர்ந்த சிவசாமி முதல் பரிசை பெற்றார். அவருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
News December 1, 2025
நாமக்கல்லில் பள்ளத்தில் ஆண் பிணம் அதிர்ச்சி!

நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முதலைப்பட்டி-நல்லிபாளையம் சர்வீஸ் சாலையில் நேற்று காலை சுமார் 50 வயது ஆண் ஒருவர் நெடுஞ்சாலைக்கும் சர்வீஸ் சாலைக்கும் இடையேயுள்ள பள்ளத்தில் தலையில் காயமடைந்து இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். மேலும் தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


