News May 26, 2024
நாமக்கல்: தொழிலாளர் சட்டத்தை திருத்த கூடாது

நாமக்கல்லில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் கூடாது பொது சுகாதாரம் 108 ஆம்புலன்ஸ் சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் மக்களுக்கான மருத்துவ தேவையை தமிழக அரசு முறையாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
Similar News
News October 29, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (29.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட அதிகாரியை, வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது ‘100’ என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம்: நீதிமன்றம் உத்தரவு!

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கில், தற்போது வரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கு வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலை வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
News October 29, 2025
நாமக்கல் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி

நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக தினசரி இயங்கும் 17235 பெங்களூரூ – நாகர்கோவில் விரைவு ரயில் 29.10.2025 இன்றும், 17236 நாகர்கோவில் – பெங்களூரூ ரயில் 30.10.2025 நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


