News March 19, 2024
நாமக்கல் தேர்தல் குறித்து சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமையில்
பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமும் மற்றும் பேருந்து பயணிகளிடம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Similar News
News April 6, 2025
நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 6) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
News April 6, 2025
கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
News April 6, 2025
இராசிபுரம் தமிழ் அறிஞர் மு.ரா விற்கு விருது

இராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியவர் மு.ரா என்கிற மு.ராமசாமி. இவர், கம்பர் குறித்தும் கம்பராமாயணம் குறித்தும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், தற்போது இவருக்கு தமிழக ஆளுநர் R.N.ரவி விருது வழங்கி கௌரவித்து உள்ளார், இந்நிகழ்வு சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஏப்.5) நடைபெற்ற ‘கம்பசித்திர விழாவில்’ பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.