News March 26, 2024

நாமக்கல்: தேர்தலுக்காக கூகுள் பே எண் வெளியிட்ட வேட்பாளர்

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன காந்தியவாதி ரமேஷ் போட்டியிடுகிறார். தனது தேர்தல் செலவுக்கு தன்னால் முடிந்ததை செலவு செய்து வருவதாகவும் தேர்தலுக்கு கூடுதலாக பணம் தேவைப்படுவதால் பொது மக்களாகிய நீங்கள் என் தேர்தல் செலவுக்கு பணம் தர கோரியுள்ளார். இதற்காக தனது கூகுள் பே 9994176591 எண்ணையும் சமுக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார் தற்போது இது பேச்சு பொருளாகி உள்ளது.

Similar News

News August 15, 2025

ரூ.2.50 லட்சம் பரிசு: அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்

image

நாமக்கல் விவசாயிகளே மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாநில அளவில் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியை பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதனை விவசாயிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் பொது விருந்து

image

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில் மதியம் 12.30 மணி அளவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 14, 2025

ஆயுள் பலம் தரும் நித்ய சுமங்கலி மாரியம்மன்!

image

நாமக்கல்: ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

error: Content is protected !!