News July 8, 2025
நாமக்கல்: துணை முதலமைச்சர் நிகழ்ச்சி விவரம்!

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நாளை கரூர் மற்றும் நாளை மறுநாள் நாமக்கல் மாவட்டங்களுக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு அரசு ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Similar News
News July 9, 2025
நாமக்கல்லில் 238 சிறப்பு முகாம்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும் இம்முகாம் தொடர்ந்து செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும். எனவே முகாம் நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் துர்க்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல்லில் இன்று (ஜூலை 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.
News July 8, 2025
நாமக்கல்: நான்கு சக்கர இரவு ரோந்து காவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜூலை-08 நாமக்கல் ராஜமோகன் 94422-56423, வேலூர் ரவி 94438-33538 – ராசிபுரம் கோவிந்தசாமி 94981-69110- திருச்செங்கோடு டேவிட் பாலு 94865-40373- திம்மநாயக்கன்பட்டி ரவி 94981-68665- குமாரபாளையம் ரகுநாதன் 97884-48891ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.