News August 22, 2024
நாமக்கல்: தவறி விழுந்து நபர் உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே பொய்யேரி பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார். இவர் தனது மகனுடன் நேற்று இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென செந்திலுமார் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 29, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.29 ) நாமக்கல் – செல்வலட்சுமி (9498170004), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 29, 2025
நாமக்கல்: நான்கு சக்கர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.29) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி (9498168482), ராசிபுரம் – சின்னப்பன் (9498169092), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.
News August 29, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் இன்று (ஆக.29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.15 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ.5.10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.