News October 14, 2025
நாமக்கல்: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடக்–கிறது. அதன்படி இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற அக்.17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு தனியார் துறையினர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 04286-222260 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 14, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து இன்று செவ்வாய் மாலை 3:52 மணிக்கும், இரவு 11:40 மணிக்கும் காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லவும், இரவு 8:45 மணிக்கும், இரவு 8:51 மணிக்கும் பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கும் செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
News October 14, 2025
நாமக்கல்: உங்கள் பகுதியில் நாளை மின்தடையா? ரெடியா இருங்க!

மாதந்திர மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (அக்.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், துத்திக்குளம், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க!
News October 14, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்று (14-10-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ.95-ஆகவும், முட்டை கோழி கொள்முதல் விலை ரூ.120 ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நீடித்து வருகின்றது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக முட்டை கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.