News October 4, 2025
நாமக்கல்: தகாத உறவால் ஜோடி தற்கொலை

கோபியை சேர்ந்தவர் ரேவதி, 35; இவரது கணவர் ராஜ்குமார், 35; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுமிதா 40, என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த ரேவதி, கணவரை கண்டித்துள்ளார். ராஜ்குமார் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் ராஜ்குமார் மற்றும் சுமிதா இருவரும் குமாரபாளையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News October 29, 2025
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம்: நீதிமன்றம் உத்தரவு!

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கில், தற்போது வரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கு வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலை வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
News October 29, 2025
நாமக்கல் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி

நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக தினசரி இயங்கும் 17235 பெங்களூரூ – நாகர்கோவில் விரைவு ரயில் 29.10.2025 இன்றும், 17236 நாகர்கோவில் – பெங்களூரூ ரயில் 30.10.2025 நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News October 29, 2025
நாமக்கல்: பட்டம் படித்தால் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க இங்கு <


