News August 14, 2025
நாமக்கல்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆக.15-ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News August 14, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (வியாழக்கிழமை) 2 மி.மீட்டரும், நாளை (வெள்ளிக்கிழமை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும், அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும் இருக்கும் என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News August 14, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – சுப்ராயன் ( 9498169031), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News August 14, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், இரவு 10:50 மணிக்கு 07332 காரைக்குடி – ஹூப்ளி ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, துமகூரு ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட் உள்ளன.