News November 22, 2025
நாமக்கல் : செயல்படாத தொலைபேசி எண்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜா முகமது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலர் துர்காமூர்த்திக்கு கடந்த 17ஆம் தேதி மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251997 என்ற எண் செயல்படவில்லை இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறும் மனு கொடுத்துள்ளார்
Similar News
News January 28, 2026
எலச்சிபாளையம் அருகே விபத்தில் ஒருவர் பலி!

கேரளாவை சேர்ந்த அன்கித், குமாரபாளையம் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார், இந்நிலையில் நேற்று (ஜன.27) நாமக்கல் – திருச்செங்கோடு செல்லும் போது ராயர்பாளையம் அருகே சிலுவங்காடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விழுந்ததில் எதிரில் வந்த டேங்கர் லாரி அன்கித் மீது ஏறியது, இதில் சம்பவ இடத்திலேயே அன்கித் உயிரிழந்தார். இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நீடிக்கின்றது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களில் 20 காசுகள் உயர்வடைந்தது குறிப்பிடத்தக்கது.