News November 19, 2025
நாமக்கல்: சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குழந்தை பலி

பரமத்தி வேலூர் அருகே வெள்ளம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்து வரும் ராமதாஸின் மகள் விஜயலட்சுமி(10) நேற்று முன்தினம் இரவு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி, அதனை குழந்தைகள் சாப்பிட்டனர். விஜயலட்சுமி உணவு உண்ட சில நிமிடத்தில் வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இறந்ததாக தெரிவித்தார். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை.
Similar News
News November 19, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.05 ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.05- ஆக நீடிக்கின்றது. கடந்த ஒன்றாம் தேதி ரூ.5.40 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலை நேற்று ரூ.6.05 ஆக விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.19) நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), பள்ளிபாளையம் – (டேவிட் பாலு – 9486540373) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 19, 2025
நாமக்கல்லில் லிப்ட் கேட்டு பணம், போன் பறிப்பு!

நாமக்கல் – மோகனூர் சாலை முல்லைநகரைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார் (71), ஸ்கூட்டரில் சென்றபோது லிப்ட் கேட்ட இளைஞர் மிரட்டி அண்ணாநகர் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். கத்தியால் மிரட்டி ரூ.9,500, செல்போன், ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டை பறித்து, பின்னர் கார்டில் இருந்து ரூ.40,000 எடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி அலங்காநத்தம் யோகேஸ்வரன் (19) என்பவர் நேற்று நாமக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


