News April 18, 2024
நாமக்கல்: கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு

மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹெர்குல் ஜித் கவுர் முன்னிலையில் இன்று நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 27, 2025
வெண்ணந்தூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி!

வெண்ணந்தூர் அருகே பொன்பரப்பிப்பட்டி பகுதியை
சேர்ந்தவர் பழனிசாமி (34). கூலித்தொழிலாளி.நேற்று விடுமுறை என்பதால் கட்டிப்பாளையம் ஏரிக்கு தனது நண்பர்கள் 3 பேருடன் மீன் பிடிக்க பழனிசாமி சென்றார்.மீன் பிடிக்க ஏரியில் இறங்கிய பழனிசாமி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர், நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஏரியில் மூழ்கிய பழனிசாமியின் உடலை மீட்டனர்.
News October 27, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ.80 ஆயிரம் மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் விவசாய நிலங்களில் நிரந்தர பந்தல் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது. ‘நிரந்தர பந்தல் அமைப்பு’ என்பது தோட்டக்கலை பயிர்களுக்கு நிலையான ஆதரவை வழங்க உருவாக்கப்பட்ட ஒரு நிரந்தர கட்டமைப்பாகும். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் அல்லது மொத்த தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, விவசாயிகள் தோட்டக்கலை துறையை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க!
News October 27, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை 525 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.101-க் கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை


