News June 4, 2024
நாமக்கல்: கொமதேக வெற்றி

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், 29,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ் மணி 2ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
News March 4, 2026
காங்கிரஸுடன் கூட்டணி.. திமுகவினர் அதிருப்தியா?

திமுக-காங்., தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 36 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட் என்ற கணக்கிற்கு இறங்கிவந்த காங்கிரஸிடம், 28 + 1 கொடுக்க தயார் என திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால், காங்., கொடுக்கும் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் 27+ 1 கொடுப்பதே அதீதம் என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
News March 4, 2026
₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.


