News March 18, 2024

நாமக்கல் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூர்யமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 10, 2025

திருச்செங்கோடு அருகே விபத்து!

image

திருச்செங்கோடு மலையடிவார பாதை வேலுசாமி மண்டபம் அருகே நேற்று கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News April 9, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.7) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 குறைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோளின் விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 9, 2025

நாமக்கல்: நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

image

இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள். @ FL 1/ FL2/FL3 FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!