News December 17, 2025
நாமக்கல் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பில், இன்று (டிசம்பர்.17) பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News December 21, 2025
நாமக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலை தேடும் ஏழை இளைஞன் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 21, 2025
பரமத்திவேலூர் அருகே விபத்து: பெண் பலி

பரமத்திவேலூர் அருகே தாத்திபாளையம் பகுதியை சேர்ந்த மணி (50). இவரது மனைவி பார்வதி (46). இவர் பில்லூர் பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார். பார்வதி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பார்வதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பார்வதி இறந்து விட்டதாக மருத்துவர தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News December 21, 2025
நாமக்கல்லில் புதிய வரலாறு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.30ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.


