News December 31, 2024
நாமக்கல் காவல்துறை ஆன்லைன் மோசடிகளை தடுக்க எச்சரிக்கை

உங்கள் நண்பர்களுடைய பெயரில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம். உங்களின் மொபைல் ஹேக் செய்ய அதிகமான வாய்ப்பு உள்ளது என்று நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிப்பு விடுத்தனர். குற்றம் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930லும் www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சலையும் தெரிவிக்கலாம்.
Similar News
News August 29, 2025
நாமக்கல்: இனி, சொந்த ஊரிலே சுயதொழில் மானியம்!

நாமக்கல் பட்டதாரிகளே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்கள் ஊரிலேயே உழவர் நல சேவை மையம் தொடங்க அரசே 30 சதவீத மானியம் வழங்குகிறது. அதாவது, 10 லட்சம் முதல் 20 லட்சம் மதிப்பிலான சேவை மையங்களுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியமாகவே வழங்கப்படும். மேலும், இதில் உங்களது திறனை மேம்படுத்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 29, 2025
நாமக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நாமக்கல் பகுதியில் வார்டு எண்: 10 பகுதி மக்களுக்காக ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.30) நடைபெற உள்ளது. நல்லிபாளையம் அரசு மேல் நிலை பள்ளியில் காலை 9:00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
நாமக்கல்: வி.ஏ.ஓ வை தாக்கிய நபர் மீது குண்டாஸ்

மல்லசமுத்திரம் அருகே பாலமேடு பகுதியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்த பெண் வி.ஏ.ஓ சிவகாமி மீது கடந்த வாரம் வீட்டுக்கே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய, சீனிவாசன் என்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் சீனிவாசன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை காவலர்கள் சிறையில் இருந்த சீனிவாசனிடம் வழங்கினர்.