News December 11, 2024

நாமக்கல்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பகுதியில் வேப்ப மரத்தில் இளைஞா் ஒருவா் கயிற்றில் தூக்கிட்டு தொங்குவதாக அப் பகுதியினர் ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த மாணவர், புதுச்சத்திரம் காரைக்குறிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஜீவரத்தினம் (17) என்பது தெரியவந்தது.

Similar News

News September 9, 2025

நாமக்கல்: கருவறையில் புதைந்திருந்த ஆச்சரியம்!

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள பெரிய ஓங்காளியம்மன் திருக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்.08) கருவறையின் அருகே குழி தோண்டிய போது மூலவர் சிலைக்கு அடியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட பழைய சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

News September 9, 2025

நாமக்கல்: 10th போதும் அரசு காவல் உதவியாளர் பணி!

image

நாமக்கல் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும்.நாமக்கல் மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News September 9, 2025

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்- 2025 பெற, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். விண்ணப்பஙகளை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர்(மு.கூ.பொ). சுற்றுலா அலுவலகம், நாமக்கல் அவர்களை தொலைபேசி எண்: 04286 280870-தொடர் கொள்ளலாம்.

error: Content is protected !!