News April 25, 2024

நாமக்கல்: கல்லூரியில் கல்லூரி கனவு குறித்த கருத்தரங்கு

image

ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கான என் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி, நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தனி தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராஜா ஜெகஜீவன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர்.

Similar News

News January 23, 2026

நாமக்கல் அருகே மதுவால் ஒருவர் பலி!

image

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே, நெய்காரம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கிரஷரில் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி, அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

News January 23, 2026

நாமக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 23, 2026

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (23-01-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.145- ஆகவும், முட்டை கொள்முதல் விலை ரூ. 80- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00 ஆகவும் நீடித்து வருகிறது. தைப்பூசம் நெருங்குவதை யொட்டி முட்டை விலை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!