News December 31, 2025

நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட குட் நியூஸ்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க tamco.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் (அ) நாமக்கல் மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் துர்காதேவி அறிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

நாமக்கல்லில் நள்ளிரவு 12-தான் டெட்லைன்! எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா விடுத்துள்ள உத்தரவில், புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று நள்ளிரவு 12 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்துவது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,அதிக சத்தம் தரும் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 31, 2025

நாமக்கல் இந்த ஒரு லிங்க் போதும்; அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து நாளை ( ஜனவரி.1 ) விடியற்காலை 1:20am மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பராவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்களே, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

error: Content is protected !!