News May 23, 2024
நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

2024-25 கல்வியாண்டில் பள்ளி & கல்லூரி சேர தேவையான ஆவணங்களை (இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ்) பெற நாளை (24.05.2024) காலை 10 மணி முதல் 2 மணி வரை பழையபாளையம், சிங்களாந்தபுரம், சிவானந்தாசாலை, நாமக்கல் (வடக்கு), கோனூர், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, சோளசிராமணி, தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
நாமக்கல்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை(அக்.30) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News October 29, 2025
நாமக்கல்லில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. இந்தநிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்னால் அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 29 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 23 முதல், 24 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் எனவும் அறிவிப்பு!


