News June 18, 2024
நாமக்கல்: கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா அவர்கள், இன்று(ஜூன் 18) ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் துறை சார்ந்த அதிகாரியிடம் மனுக்களை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 28, 2025
நாமக்கல்லில் 89.96°F வெப்பம் பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 89.96° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.
News August 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ.5.05 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 28, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.