News April 24, 2024

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.121 ஆனது. முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

Similar News

News November 20, 2024

காளான் வளர்க்க இலவச பயிற்சி

image

ராசிபுரம் அடுத்த மோளப்பாளையம் கிராமத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 25, 26-ல் நடக்கவுள்ளது. இதில், விவசாயிகள், பெண்கள், புதிய தொழில் முனைவோர், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 98946-89809 என்ற எண்ணை அழைக்கலாம்.

News November 20, 2024

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 8 கி.மீ. மற்றும் 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

image

நாமக்கல், கொல்லிமலையில் தொடர்மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள பெருக்கால் அருவியின் அடிவாரப்பகுதியில் நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.