News April 28, 2024
நாமக்கல்: கடும் வெயில்

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்றும், அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர், பரமத்தி, தருமபுரி, திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 9 இடங்களில் இன்று 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.5.35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.30 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
News October 28, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.27 நாமக்கல்-( தங்கராஜ் – 9498110895) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 27, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட அதிகாரியை அல்லது 100-ஐ டயல் செய்து அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


