News September 27, 2025

நாமக்கல் எம்.பி ராஜேஷ் குமார் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

image

நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் இன்று(செப்.27) பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல்: காலை 8:30 மணிக்கு ராசிபுரத்தில் நடைபெறும் இலவச மருத்துவ முகாமிலும், காலை 9 மற்றும் 10:30 மணி நாட்டாமங்கலம் மற்றும் தோளூர் பகுதியில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் பாலகம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

Similar News

News January 23, 2026

நாமக்கல்: மக்களே உடனே செக் பண்ணுங்க! SAVE MONEY

image

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். யாருக்காவது இது நிச்சயம் உதவும் அனைவருக்கும் இதை பகிருங்கள்! SHARE IT

News January 23, 2026

எலச்சிபாளையம் அருகே சோகம்: தொழிலாளி பலி!

image

சேலம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி கடந்த 20 வருடங்களாக எலச்சிபாளையம் அருகே, நெய்காரம்பாளையம் தனியார் கிரஷரில் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். நேற்று அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் போலீசார் நேற்று இரவு 12 மணிக்கு பிரேதத்தை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 23, 2026

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணி அளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இதில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!