News June 25, 2024
நாமக்கல் எம்.பி யாக மாதேஸ்வரன் பதவியேற்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாதேஸ்வரன், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News September 7, 2025
நாமக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 7, 2025
நாமக்கல்: திடீர் மின்தடை, அதிக கட்டணமா? உடனே CALL

நாமக்கல் மக்களே, உங்கள் மின் கட்டணம், மின் தடை, புதிய இணைப்பு, மீட்டர் பழுது, கூடுதல் கட்டண வசூல் மற்றும் ஆபத்தான மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் 24 மணி நேரமும் ‘மின்னகம்’ என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். இதற்காக 94987 94987 எண்ணை அழைத்தால் விரைவான, உறுதியான தீர்வு கிடைக்கும். மேலும் உங்கள் புகார்களின் நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் பெறுவீர்கள். SHARE IT!
News September 7, 2025
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், (செப். 6) நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.102 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.15 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.