News November 17, 2025

நாமக்கல்: ஊழியர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

image

எஸ்.ஐ.ஆர். (SIR) திட்டப் பணிகளை உரிய காலத்தில் விரைந்து முடிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா எச்சரித்துள்ளார். பணிகளில் அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அதிகாரிகளும் பணியாளர்களும் திட்டச் செயலாக்கத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 17, 2025

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 17, 2025

நாமக்கல் மக்களே இன்று முதல் இலவசம்! Don’t Miss

image

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவச வீட்டு மின் சாதனங்கள் பழுது பார்க்கும் பயிற்சி இன்று நவ.17 முதல் 30 நாட்களுக்கு நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிப்பு . மேலும் விபரங்களுக்கு 8825908170 என்ற எண்னை அணுகவும். அதிகம் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

நாமக்கல்: 3,739 கோடி ரூபாய் கடன் – தகவல்

image

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், கூட்டுறவு வார விழாவில் கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்த நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி கூட்டுறவு வங்கி மூலம், பயிர் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம்’ என செய்தியாளர்களிடம் கூறினார்.

error: Content is protected !!