News December 28, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று டிச.27 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 28, 2025
நாமக்கல்லில் உச்சம்.. நீடிக்கும் விலை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40-ஆக நீடித்து வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.6.40- ஆக நீடித்து வருகிறது. வட மாநிலங்களில் நிலவும் கடுமையான குளிரின் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உச்ச விலையில் நீடிக்கிறது
News December 28, 2025
நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாமக்கல் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
நாமக்கல்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டத்தை தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!


